This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10This changing weather, protect your family with big discounts! Use code: FIRST10
ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
Track your pregnancy journey

8 வார கர்ப்பத்தின்போது ரத்தக்கசிவு - நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டுமா?(Bleeding At 8 Weeks Pregnant—Should You See A Doctor In Tamil)

Vaginal Bleeding
Written by - Avira Paraiyarகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: May 29, 2026
8 வார கர்ப்பத்தின்போது ரத்தக்கசிவு - நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டுமா?(Bleeding At 8 Weeks Pregnant—Should You See A Doctor In Tamil)
Read time6 min

AI-Generated Summary

Quick overview in 30 seconds
toggle

சுருக்கம்


  • கர்ப்பத்தின் 8வது வாரத்தில் சுமார் 20% பெண்களுக்கு பெண்ணுறுப்பில் உதிரப்போக்கு ஏற்படுகிறது, இது உட்புற ரத்தப்போக்கு, கர்ப்பப்பை வாய் மாற்றங்கள் போன்றவற்றால் ஏற்படலாம்.
  • மோலார் கர்ப்பம், கருச்சிதைவு, பாலியல் ரீதியில் பரவும் தொற்றுகள், எக்டாபிக் கர்ப்பம் ஆகியவையும் 8 வார கர்ப்பினி பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாகும்.
  • உடல் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் இமேஜிங் பரிசோதனை, ஹெசிஜி அளவை கண்டறியும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் உதிரப்போக்கின் காரணத்தை மருத்துவர்கள் கண்டறிவார்கள்.
  • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது? Explore our Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns.
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns
Rating3.9
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g
Rating4.9
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each
Rating4.7

முன்னுரை (Introduction)

கர்ப்பத்தின் ஆரம்ப நிலையான 8 வாரங்களிலேயே உலகெங்கிலும் உள்ள 20 சதவீதப் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் உதிரப்போக்கு ஏற்படுகிறது. வெகு விரைவில் இதனை கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

8 வார கர்ப்பத்தின் போது பெண்ணுறுப்பில் கசிவு ஏற்படுவதற்கான காரணம் (Causes of vaginal bleeding at 8 weeks of pregnancy In Tamil)

8 வார கர்ப்பத்தின் போது கசிவு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன:

  • உட்புற ரத்தப்போக்கு (Inner bleeding)

உங்கள் வயிற்றில் கருவை கோரியன் என்னும் சவ்வு சூழ்ந்திருக்கும். இதுவே நஞ்சுக்கொடியாக மாறுகிறது. இந்நிலையில், கோரியன் மற்றும் கருப்பை சுவரின் இடையே உள்ள பகுதியில் ரத்தப்போக்கு ஏற்படுகிறது. இதனால் கடுமையான வயிற்று வலி மற்றும் பெண்ணுறுப்பில் உதிரப்போக்கு ஏற்படுகிறது.

  • கர்ப்பப்பை வாய் மாற்றங்கள் (cervical changes)

கர்ப்ப காலத்தின்போது, கர்ப்பப்பை வாய் பகுதிக்கு ரத்த ஓட்டம் மிகுதியாக இருக்கும். கர்ப்ப காலத்தின்போது மேற்கொள்ளப்படும் பாப் பரிசோதனை காரணமாக கர்ப்பப்பை வாய் பகுதி தூண்டப்பட்டு, அதன் காரணமாக 8 வார கர்ப்பினி பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்படக் கூடும்.

  • மோலார் கர்ப்ப நிலை (Molar pregnancy stage)

இந்த நிலையில், கருவின் உள்ளே சாதாரணமான திசுக்கள் வளருவதற்குப் பதிலாக கருப்பையில் அசாதரணமான திசுக்கள் வளரத் தொடங்கும். இந்த திசுவானது சில சமயம் புற்றுநோயாக மாறி பரவக் கூடும். இதனை கெஸ்டேஷனல் ட்ரோபோபிளாஸ்டிக் நோய் என்றும் குறிப்பிடுகின்றனர். 8 வார கர்ப்பினி பெண்ணுக்கு பிரவுன் கலரில் கசிவு ஏற்படுவதும், இதனுடன் குமட்டல் மற்றும் வாந்தி ஆகிய தொந்தரவுகள் நீடிப்பதும் மோலார் கர்ப்பத்தின் அறிகுறிகள் ஆகும்.

  • கருச்சிதைவு (Miscarriage)

8 வார கர்ப்பினி பெண்ணுக்கு உதிரப்போக்கு நிகழ்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உதிரப்போக்கு நிகழுகிறது. அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலமாக முன்கூட்டியே இதனை கண்டறியலாம். குழந்தையின் இதயத்துடிப்பை மருத்துவர் கண்டறிவதன் மூலமாக, கருச்சிதைவுக்கான அபாயத்தை தவிர்க்க இயலும்.

  • தொற்று (infections)

பாலியல் ரீதியில் பரவும் நோய்களான கிளமிடியா, கோனேரியா, பெண்ணுறுப்பு தொற்று அல்லது கர்ப்பப்பை வாய் தொற்று போன்ற காரணங்களாலும் 8 மாத கர்ப்பினி பெண்ணுக்கு உதிரப்போக்கு நிகழக் கூடும்.

  • எக்டாபிக் கர்ப்பம் (ectopic pregnancy)

சிலருக்கு கர்ப்பப்பைக்குப் பதிலாக ஃபெலோபியன் டியூபிலேயே (கருமுட்டை குழாய்) ஜிகோட் வளரக் கூடும். இதை எக்டாபிக் கர்ப்பம் அல்லது இடம் மாறிய கர்ப்பம் எனக் குறிப்பிடுகின்றனர். கருமுட்டை குழாயில் நிகழும் அசாதாரண வளர்ச்சி காரணமாக அது வெடிக்கலாம். இதனால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும். பெண்ணுறுப்பில் உதிரப்போக்கு மற்றும் வயிற்றுப் பகுதியில் மிகக் கடுமையான வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

8 வார கர்ப்பினி பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்படுவதை கண்டறிவதற்கான பரிசோதனை (Diagnosis of bleeding in 8-week pregnant women In Tamil)

8 வார கர்ப்பிணி பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏன் ஏற்படுகிறது என்பதை கண்டறிய மகப்பேறு மருத்துவர்கள் சில மருத்துவ பரிசோதனைகளை பரிந்துரை செய்வார்கள்.

உடல் பரிசோதனை: பெண்ணுறுப்பில் நேரடியாக பரிசோதனை மேற்கொள்வது.

இமேஜிங் பரிசோதனை (imaging test) :

பெண்ணுறுப்பு மற்றும் குழந்தையின் அளவை பரிசோதனை செய்ய அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படலாம். டோப்லர் ஸ்கேன் மூலமாக குழந்தையின் இதயத்துடிப்பு பரிசோதனை செய்யப்படும்.

ரத்தப் பரிசோதனைகள் (Blood tests):

பெண்ணின் உடலில் ஹெசிஜி (human chorionic gonadotropin) அளவு ரத்தப் பரிசோதனை மூலமாக கண்டறியப்படும். இந்த ஹெசிஜி மிகுதியாக இருப்பின் ஒன்றுக்கு மேற்பட்ட கர்ப்பம் அல்லது மோலார் கர்ப்பம் போன்றவை இருக்கக் கூடும். ஹெசிஜி அளவு குறைவாக இருந்தால் அது கருச்சிதைவு அல்லது மாறுபட்ட இடத்திலான கர்ப்பமாக இருக்கலாம்.

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும் (When to see a doctor)

8 வார கர்ப்பினி பெண்ணுக்கு கீழ்காணும் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அவர்கள் மருத்துவரை அணுக வேண்டும்:

  • 8 வார கர்ப்பினி பெண்ணுக்கு வெளிர் சிவப்பு நிறத்தில் உதிரப்போக்கு ஏற்படும்போது அல்லது ஒரு நாளுக்கு மேலாக இந்தப் பிரச்சினை நீடிக்கும்போது.

  • வயிற்றுப் பிடிப்பு, காய்ச்சல் அல்லது குளிர் ஆகியவற்றுடன் மிதமானது முதல் மிகுதியான உதிரப்போக்கு.

  • பெண்ணுறுப்பில் திசுவுடன் சேர்ந்த வெள்ளை நிற கசிவு.

  • பெண்ணுறுப்பில் பிரவுன் நிற கசிவு (கருச்சிதைவுக்கான அறிகுறி)

  • மஞ்சள் நிற கசிவு

  • சளி போன்ற கசிவு

8 வார கர்ப்பினிக்கு உதிரப்போக்கு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

8 வார கர்ப்பினிக்கு உதிரப்போக்கு ஏற்படுகிறது என்றால், அந்தப் பெண் கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  • தூய்மையான நாப்கின் ஒன்றை பயன்படுத்தி, எந்த அளவுக்கு உதிரப்போக்கு ஏற்படுகிறது மற்றும் அதன் தன்மை எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். (வெளிர் சிவப்பு அல்லது பிரவுன் நிற கசிவு, மெலிந்த ரத்தம் அல்லது கட்டிகள்)

  • உதிரப்போக்குடன் ஏதேனும் திசுக்கள் வெளியேறினால், அதை சேகரித்து மருத்துவரிடம் பரிசோதனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • உதிரப்போக்கு நிகழும்போது மென்ஸ்சுரல் கப் அல்லது டேம்பான் போன்றவற்றை பயன்படுத்த கூடாது.

  • உதிரப்போக்கு காலத்தில் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

  • அதிக காய்ச்சல், குளிர், கடுமையான வயிற்று வலி மற்றும் பெண்ணுறுப்பு கசிவு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

சிகிச்சை (Treatments)

8 வார கர்ப்பினி பெண்ணுக்கு மிகக் கடுமையான உதிரப்போக்கு, வழக்கத்திற்கு மாறாக வெள்ளைநிற கசிவுடன் திசுக்கள் வெளியேற்றம் அல்லது பிரவுன் நிற கசிவு போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக 8 வார கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு நிகழுவது அபாயகரமானது கிடையாது. ஆனால், மிகுதியாக உதிரப்போக்கு நிகழும் பட்சத்தில், அது இடம் மாறிய கர்ப்பம் அல்லது கருச்சிதைவுக்கான அறிகுறியாக இருக்கலாம்.

இதையும் தெரிந்து கொள்ளலாமே! - கர்ப்ப காலத்தில் பனிக்குடம் உடைதல்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்(FAQ)

  • 8 வார கர்ப்பினி பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்படுவதற்கு காரணமான தொற்றுகள் என்னென்ன?

பெண்ணுறுப்பு அல்லது கர்ப்பப்பை வாய் பகுதியில் ஏற்படும் தொற்று, ஹெமோராய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்ற காரணங்களால் 8 வார கர்ப்பினி பெண்ணுக்கு உதிரப்போக்கு ஏற்படக் கூடும்.

  • கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கை தவிர்ப்பது எப்படி?

வளரும் கருவுக்கு ஊட்டச்சத்து அளித்திடும் வகையில், மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் இரும்புச்சத்து மற்றும் விட்டமின் மாத்திரைகளை கர்ப்பினி பெண்கள் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். உதிரப்போக்கை தவிர்க்க மிகக் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் மற்றும் கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக மலச்சிக்கலை தவிர்த்து, நிவாரணம் பெறலாம்.

  • 8 வார கர்ப்பிணி பெண்ணுக்கு உதிரப்போக்கு நிகழ கர்ப்பப்பை வாய் பாலிப் எப்படி காரணமாக அமைகிறது?

கர்ப்பப்பை வாய் பாலிப் அல்லது கர்ப்பப்பை வாய் பகுதியில் புற்றுநோய் அல்லாத வளர்ச்சி என்பது பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு நிகழுகிறது.

TAGS :

bleeding during pregnancy In Tamil, reasons for bleeding during pregnancy in tamil, bleeding during 8 weeks of pregnancy in Tamil, Bleeding At 8 Weeks Pregnant—Should You See A Doctor In English, Bleeding At 8 Weeks Pregnant—Should You See A Doctor In Hindi, Bleeding At 8 Weeks Pregnant—Should You See A Doctor In Telugu, Bleeding At 8 Weeks Pregnant—Should You See A Doctor In Bengali

கர்ப்பகால தாய்மார்களால் நம்பப்படும் பராமரிப்பு

உங்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும் மென்மையான, பாதுகாப்பான தயாரிப்புகள் இங்கே உள்ளன.

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

Baby Wellness Kit | Skincare Gift Set for Newborns

417 Moms bought
₹999₹154535% Off
Rating
3.9
()
Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Pregnancy Wellness Super Saver Combo - Stretch Marks Cream for Women 100g + Long Grain Pure Saffron for Pregnant Women (Kesar) - 2g

Fades Stretch Marks | Improves Digestion | Reduces Stress

530 Moms bought
₹917₹129829% Off
Rating
4.9
(50)
Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

Pregnancy Massage Oil + Coconut Oil - 200 ml each

2005 Moms bought
₹720₹104831% Off
Rating
4.7
(62)

Article Posted Under

Related Articles

Related Topics

Medical Disclaimer

This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

foot top wavefoot down wave

AWARDS AND RECOGNITION

Awards

Mylo wins Forbes D2C Disruptor award

Awards

Mylo wins The Economic Times Promising Brands 2022

AS SEEN IN

Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on Business World
Mylo featured on CNBC
Mylo featured on Financial express
Mylo featured on The Economics Times
Mylo featured on Business Today
Mylo featured on TOI
Mylo featured on inc42
Mylo featured on Business Standard
Mylo featured on YourStory
Mylo featured on ANI
Mylo Logo

Start Exploring

wavewave
About Us
Mylo_logo
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
  • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
  • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
  • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.